மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை தடை செய்ய நடவடிக்கை

280 0

பாடசாலை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதை தடைசெய்யும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்பார்ப்பதை விடவும் உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது அதிகரித்துள்ளதால், இது தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுப்பது அவசியமெனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை நிறைவு செய்வதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம், சிறுவர் துன்புறுத்தலுக்கு எதிரான அமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா மன்றம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படக் கூடாதென்ற சுற்றுநிருபமானது முதற் தடவையாக 1913ஆம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment