இலங்கை அகதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இன்று இந்தியா இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தவரை பொலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசித்து வரும் இலங்கை திருகோணமலை பகுதியைச்சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மண்டபம் முகாமில் வசித்து வருகிறார்.
சொந்தமாக பல்வேறு தொழில்களை நடாத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏலசீட்டு நடாத்தி வந்த நிலையில், ஏலம் எடுத்த நபர்கள் டிலாணி,மீனாட்சி,சங்கர் உட்பட 6 பேர் அகதிகள் 7 பேர் மண்டபம் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று மனோஜ் என்பவர் பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை, மற்றும் பொருளாதார குற்றபிரிவில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மனம் வேதனை அடைந்த மனோஜ் 2 முறை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்ச்சி செய்துள்ளார்.
தன் குடும்பம் வறுமையான சூழ்நிலையில் உள்ளதால் வாழ வழியின்றி இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனோஜ் என்பவர் மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயற்ச்சி செய்தார்.
இந்நிலையில் அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.