விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளட்ட மூவர் மீதும், ச.தொ.ச .நிறுவனத்திற்கு சொந்தமான அரச நிதியை கடந்த அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த போது, முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டர்ன் பெர்னாண்டோ, ச.தொ.ச. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளீன் பெர்னாண்டோ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிரத்தியே செயலாளர் மொஹமட் ஷாகிர் ஆகியோர் மீதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.