கடலூர் மத்திய சிறையில் இன்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீ சார் திடீர் கோதனை மேற்கொண்டனர்.
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கைதிகள் செல்போன், டி.வி., எப்.எம். ரேடியோ பயன் படுத்தியதும், மெத்தை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் இன்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீ சார் திடீர் கோதனை மேற் கொண்டனர்.
சிறைசாலையில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
செல்போன், சிம்கார்டு மற்றும் கஞ்சா பொட்டலங்களை மற்றும் ஆயுதங்களை பதுக்கி கைதிகள் வைத்துள்ளனரா? என தீவிர சோதனை மேற் கொண்டனர்.
தொடர்ந்து சிறை சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ் நிலை நிலவி வருகிறது. #