சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை – சதிரக சந்தியில் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் தங்காலை – பல்லயக்குடாவ பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் ஒரு சிகரட்டை 40 ரூபாய் விலையில் வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்ய முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து 420 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன