பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் கடுமையாக தாக்கியதில் இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.
மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் அந்நாட்டின் பாகுபோ நகரம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அதில் 2 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர். இவர்கள் தவிர பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.