இராஜாங்க அமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா மீது, மட்டக்களப்பு, வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
150 மில்லியன் ருபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான மேசாடியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் போரிலே இவர்கள் மீது கடந்த 14 ஆம் திகதி வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு தினைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.