ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் முன்னணியினை பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சியின் பெயரையும் மாற்றம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவிஸ்ஸாவெல்ல, வகவத்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.