நாயுடன் வந்த குவைட் நாட்டு தம்பதிக்கு தண்டனை தீர்ப்பு

236 0

குவைட் நாட்டிலிருந்து அனுமதிப் பத்திரம் இன்றி நாய்க் குட்டியொன்றை எடுத்துவந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் போட்ட தம்பதியினருக்கு எதிராக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அந்த தம்பதியினருக்கு எதிராக பல பிரிவுகளில் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. மிருக வளர்ப்பு, சுகாதார திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றம் ஆகியவற்றிலேயே இவ்வாறு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த குவைட் நாட்டு தம்பதி இதற்கு முன்னரும் இரு சந்தர்ப்பங்களில் நாயுடன் வந்து இலங்கையில் விமான நிலையத்திலும் ஏனைய இடங்களிலும் பிரச்சினைப்படுத்தியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இறுதியாக கடந்த ஜூலை 27 ஆம் திகதி நாட்டுக்கு வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை வைத்தே இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி நாளை எடுத்து வந்த குற்றச்சாட்டுக்கு 5000 ரூபா தண்டப் பணம் மிருக வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகளுக்கு தாக்குதல் நடாத்திய சம்பவம் மற்றும் அனுமதிப் பத்திரம் இன்றி நாளை எடுத்து வந்தமை என்ப தொடர்பில் சுங்கப் பிரிவின் 163 ஆம் இலக்க சட்டத்தின் படி ஒரு லட்சம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாயையும் அரசுடைமையாக்க சுங்க சட்டத்தின் படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தம்பதிக்கு 6 மாத சிறைத்தண்டனையை நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த சிறைத் தண்டனையை 5 வருட காலத்துக்குள் இலங்கையில் நிறைவேற்றிக் கொள்வதற்கும் நீதிமன்றம் அவகாசம் அளித்து தீர்ப்பளித்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக இந்த தம்பதிக்கு தலைக்கு 9 ஆயிரம் ரூபா வீதம் இருவருக்கும் 18 அயிரம் ரூபா தண்டப் பணத்தையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

Leave a comment