வானொலி, தொலைக்காட்சி என்பவற்றின் பக்கம் கவனித்தால், காலையில் குரோதங்களுடன் ஆரம்பித்து மாலையில் குரோதங்களுடனே முடிவடைவதாகவும், அதேபோன்று அரசாங்கம் சமய சூழலையும் அழித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ருவன்வெலிசாய பௌத்த வழிபாட்டு வளாகத்தில் நேற்று (15) இடம்பெற்ற பௌத்த மகா சம்மேளன ஒன்றுகூடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கத்திலுள்ள சகலரும் தலைவர்கள் போன்றுதான் செயற்படுகின்றனர். ஒவ்வொருவரும் மற்றவருக்கு ஏசிக் கொள்கின்றனர். பாடசாலை மாணவர்களுக்கு அடிக்கும் சமூகமொன்று இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அன்று பாடசாலையில் கையினாலும், காலினாலும் தான் அடித்துக் கொண்டார்கள். இன்று கம்பு தடிகளினால் கொலை செய்து கொள்கின்றார்கள்.
இந்த நிலைமை அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்மாதிரிகளாக கொண்டே ஏற்பட்டுள்ளது என்பதே எனது நம்பிக்கையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.