நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த பட்ஜெட்டுக்கு மஹிந்த ஆதரவு வழங்கினார்- பிமல் ரத்னாயக்க

382 0

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு தமக்கு அழைப்பு விடுக்க முன்னர் அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுப் பார்க்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் இதற்கு முன்னர் கொண்டுவந்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி தனது வாக்குகளைப் பயன்படுத்தும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment