தவறான உறவுகள் மூலம் கர்ப்பம் தரித்த யுவதிகளுக்கு கருக்கலைப்பு சத்திரசிகிச்சை செய்தல் மற்றும் கருக்கலைப்பு மாத்திரை விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளில் பாரியளவில் ஈடுபட்டு வந்த மூவர் பாணந்துரை வலான ஊழல் மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான 80 கருக்கலைப்பு மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடையே ஜா-எல பிரதேசத்தில் இயங்கும் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் நிவந்தம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதையுடைய ஒருவர் எனவும் அவர் தனது வீட்டிற்குள் கருக்கலைப்பு சத்திரசிகிச்சையை நடாத்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கருக்கலைப்புக்காக இதுவரையில் அவரிடம் வந்தவர்கள் 14 முதல் 25 வயதுக்கிடைப்பட்ட யுவதிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் அதிகமானோர் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் யுவதிகள் எனவும் கூறப்படுகின்றது.
ஒரு கருக்கலைப்பை மேற்கொள்ள 17500.00 ரூபா குறித்த சந்தேகநபர்களினால் அறவிடப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.