வெல்லவாய பிரதேச செயலகப்பிரிவில் சிறு பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சில வயது வந்தவர்களுக்கும் வயிற்றுப்போக்குடன் கூடிய மர்மக்காய்ச்சல் தொற்றியுள்ளது.
சுமார் ஐந்து மாத காலமாக வயிற்றுப்போக்குடன் கூடிய மர்மக் காய்ச்சல் சிறு பிள்ளைகளை தொற்றி வருகிறது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நோய் நிலைமை காரணமாக பெற்றோர் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாததன் காரமாக அப் பகுதியில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பாக வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை தொடர்புகொண்டு கேட்ட போது,
இது ஒரு வகையான வைரஸ் தொற்றுக் காய்ச்சல் எனவும் சுட்டாறிய நீர் சுத்தமாக தயாரிக்கப்பட்ட வீட்டு உணவுகளை உட்கொள்ளல் போன்ற செயற்பாடுகளுடன் ஊடாக நோய் நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்றார்.
மேலும் நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 60 நோயாளர்கள் வரை தவறாமல் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.