மூவர் கொண்ட நீதிபகள் குழு முன்னிலையில் 20 இற்கு எதிரான மனு விசாரணை

224 0

மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதா எனக் கண்டறிவதற்கு மூவர் கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிசிர டி ஆப்ரூ வின் தலைமையிலான நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இந்த சட்ட மூலம் ஆராயப்படவுள்ளது.

இந்த சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து 8 முறைப்பாட்டு மனுக்களும், சட்ட மூலத்துக்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், அதன் உப தலைவர் மெடில்லே பஞ்ஞாலோகதேரர் , அல்லே குணவங்ச தேரர் மற்றும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில ஆகியோர் உட்பட 8 பேர் இதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நீதிபதிகளின் குழு முன்னிலையில் முதல் தடவையாக கடந்த 12 ஆம் திகதி தகவல்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment