பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 ஆம் திருத்தச் சட்டத்தினால் வழங்க முடியாமல் போன பிரிவினைவாதிகளின் தேவையை ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன் மூலம் வழங்குவதற்கே 20 இன் மூலம் முயற்சி செய்வதாகவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக பகிரங்கமாக வாக்களிப்பவர்களை மலர்மாலை சூடி வரவேற்கத் தயாராகவிருப்பதாகவும் தேரர் இன்று (13) தேசிய வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்ற தேசிய பிக்கு புத்திஜீவிகள் அமைப்பின் அமர்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.