வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவோமென இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எமது கட்சி பல கட்சிகளை உள்ளடக்கியுள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரைத் தெரிவு செய்வோம்.
இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்தவே நாங்கள் விரும்புகின்றோம். மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை நாங்கள் இந்தியாவின் உதவியுடனேயே நிர்மாணிக்க திட்டமிட்டோம்.
ஆனால் அப்போது இந்தியா முன்வராததால் சீனாவுடன் இணைந்து அவற்றை நிர்மானித்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச எம்.பி. அங்கு இந்திய ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.