முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குருணாகல் மேல் நீதிமன்ற நீதிவான் மேனகா விஜயசுந்தரம் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ச.தொ.ச. நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.