சர்வதேச போதைப் பொருள் வியாபாரி என்றழைக்கப்படும் மொஹமட் சித்திக் விடுதலை

221 0

ஹெரோயின் 8 கிராமை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப் பொருள் வியாபாரி என்றழைக்கப்படும் மொஹமட் சித்திக் உள்ளிட்ட 5 பேர் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு உயர் நீதி மன்ற நீதிபதி விக்ரம களு ஆராய்ச்சி குறித்த ஐவரையும்  விடுதலை செய்யுமாறு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி மஹரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

2015ஆம் ஆண்டு மொஹம்மட் சித்திக் பாகிஸ்தான் நாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் அந் நாட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மொஹம்மட் சித்திக்கை 6 மாத காலமாக தடுப்புக் காவலில் வைத்து  விசாரணை மேற்கொண்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment