கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு உரம் ஏற்றிவந்த லொறி ஒன்றில் சிக்குண்டு லொறியின் நடத்துடனர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழகிழமை அதிகாலை 03 மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
கொழும்பில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியின் சாரதியும் நடத்துனரும் அதிகாலை இரண்டு மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் இளைப்பாறி கொண்டிருந்ததுடன், லொறியின் நடத்துனர் லொறியின் கீழ் இளைப்பாறி கொண்டிருந்துள்ளார்.
அதிகாலை 03மணியளவில் மீண்டும் சாரதி நுவரெலியா நோக்கி செல்வதற்கு ஆயத்தமாகி லொறியை இயக்க முற்பட்ட போது கீழே இருந்த நடத்துனர் மீது லொறி ஏறியதன் காரனமாகவே நடத்துனர் உயிர் இழந்துள்ளதாக வட்டவலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் நுவரெலயா ஹவெளிபகுதியை சேர்ந்த 45வயதுடைய தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இது தொடர்பில் சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதவான் வரவழைக்கபட்டு நீதவானின் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்ற பின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கைது செய்யபட்ட சாரதியை இன்று வியாழக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.