ஒலுவில் மீன்பிடித் துறைமுக நுழைவாயில் பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதாக கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிரதி அமைச்சர் ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் இயந்திரப் படகுகள் செல்லும் பாதையில் மண் நிரம்பியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீனவ சங்கங்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்துக்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மாலை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை அமைச்சு அலுவலகத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் சந்தித்து அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் குறித்த பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்திக் கூறியபோது மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.