இந்தியாவைச் சேர்ந்த முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயரிய மனித நேயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிக்கலான முகக்குறைபாடுகளைக் கொண்ட பாகிஸ்தான் சிறுவர்களை, அந்நாட்டு பல் மருத்துவ சங்கம் 2010-ம் ஆண்டிலிருந்து முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாலாஜியிடம் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வருகிறது. பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்த ஏழை சிறுவர்களுக்கு பாலாஜி, இலவச சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார்.
இதனை கவுரவிக்கும் வகையில், சமீபத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடைபெற்ற 40-வது ஆசியா -பசிபிக் டென்டல் ஃபெடரேஷன் மாநாட்டில் பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் மிக உயரிய மனிதநேய விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் பேராசிரியர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.