நடந்துமுடிந்த யுத்தம் எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது!

332 0

1100270833untitled-1நடந்துமுடிந்த யுத்தமானது எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளதாக வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தினால் நாம் தேடிவைத்த சொத்துக்களான காணி, வீடு, வாசல், நகை, நட்டு, பொருள், பண்டங்கள் என அனைத்தையும் இழந்த நிலையில் கல்வி மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்ற 10 ஆவது விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் கல்விக்கு முதலிடம் கொடுத்து முறையாகப் பெற விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

வீதியில் கூடுவது, வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்து காலத்தை வீணாக்காது ஒழுக்கச் சீர்கேடு மற்றும் துர்ப் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களைத் தவிர்த்து, அவர்களைத் திருத்த முன்வரவேண்டும்.

அப்போதுதான் மீண்டும் ஒரு வழமான சமூகம் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.