மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு இறுதிப்போட்டி யேர்மனி 2018

30035 0

யேர்மனியில் தழிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் மற்றும் உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் 9.9.2018 சனிக்கிழமை நிறைவுபெற்றது.
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து தொடர்ச்சியாக ஐந்து மாநிலங்களில் மெய்வல்லுனர் மற்றும் உதைபந்தாட்டம், பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளை நடாத்தியது. இம் மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களில் போட்டியிட்ட மாணவர்களில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை இறுதிப்போட்டிக்குத் தெரிவுசெய்து இப் போட்டியினை யேர்மனியின் நொய்ஸ் நகரத்தில் மிகச் சிறப்பாக நடாத்தியது.

தமிழீழ மற்றும் யேர்மனியத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. மாநிலங்களில் முதல் இடங்களைப் பெற்ற அணிநடைகள் இங்கேயும் களமிறக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.

அத்தோடு தமிழாலயங்களுக்கிடையிலான ஒப்பனையும் பாவனையும் எனும் போட்டி நிகழ்வும் இடம்பெற்றது. இன்றைய தமிழ்மக்களின் துயர்களையும் தாயகத்தில் மக்கள் படும் அவல நிலைகளையும், தொடர்ந்தும் சிங்கள அரசு செய்யும் இனஅழிப்பு சம்பந்தமான காட்சிகளையும் துல்லியமாக மாணவர்கள் காட்சிப்படுத்தியும்,பாவனைசெய்தும் காண்பித்தார்கள்.


விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இறுதியில் மூண்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கேடயமும், புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற தமிழாலயங்களுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

இத்தோடு ஓவ்வொரு வயதுப்பிரிவிலும் முதல் மூண்று நிலைகளைப் பெற்றுக் கொண்டவர்களின் நிலைகள் அவர்களின் நேரக்கணிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே அழுத்தவும்.

Endspiel_Ergebnis Liste Einzel

Leave a comment