சிரியாவில் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் விமானி பலி

356 0

201609200834199340_isil-syrian-army-warplane-shot-down-pilot-killed_secvpfசிரியாவின் ராணுவப்படைக்கு உரிய போர் விமானத்தை ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் தரையில் இருந்தபடி சுட்டு வீழ்த்தியதில் விமானி பலியானார்.

சிரியாவில் அரசுப்படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சண்டை நிறுத்தம் அமலில் இருக்கிறது.

இருந்த போதிலும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சிரியா ராணுவ படைகளின் போர் விமானங்கள் ஐ.எஸ். அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்திவருகின்றன.

இந்த நிலையில், ஐ.எஸ். அமைப்பினரின் பிடியில் உள்ள டெயிர் எசோர் நகரில் சிரியாவின் ராணுவப்படைக்கு உரிய போர் விமானம் ஒன்று ஐ.எஸ். அமைப்பினரை குறிவைத்து வான் தாக்குதலை நடத்தியது. அப்போது அந்த போர் விமானத்தை ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் தரையில் இருந்தபடி சுட்டு வீழ்த்தினர். அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தை இயக்கிய விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஐ.எஸ். இயக்கத்தினர் தங்களுக்குரிய அமாக் பத்திரிகையில் இந்த தகவலை வெளியிட்டு உள்ளனர்.