காவிரி பிரச்சினையால் ரூ.40 கோடி தேங்காய் எண்ணெய் தேக்கம்

306 0

201609201106310540_cauvery-issue-coconut-oil-stagnation-the-rs-40-crore_secvpfகாவிரி பிரச்சினையால் ரூ.40 கோடி ரூபாய் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய்கள் தேக்கம் அடைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆலை உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர் பகுதிகளில் 2 ஆயிரம் எண்ணெய் களங்களும், 135 தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்ளன. தினமும் 500 டன் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு லாரிகளில் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு டன் தேங்காய் எண்ணெய் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில் காவிரி பிரச்சினையால் கர்நாடக மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டது.இதனால் வன்முறை கும்பல் தமிழக பஸ்கள், லாரிகள் வேன் தீ வைத்து கொளுத்தினர். இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  இதையொட்டி வடமாநிலங்களுக்கு கர்நாடக மாநிலம் வழியாக தேங்காய் எண்ணெயை அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் ரூ.40 கோடி தேங்காய் எண்ணெய் தேக்கம் அடைந்துள்ளது.

இதுகுறித்து எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் கூறும் போது, ‘‘ பாமாயில் இறக்குமதி குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களுக்கு கர்நாடகா வழியாக தேங்காய் எண்ணெய் அதிகளவு விற்பனைக்கு சென்றது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் தேக்கம் அடைந்துள்ளது. ஒரு சில லாரிகள், கேரளா, மங்களூர் வழியாக சென்றாலும் போக்குவரத்து செலவு அதிகரிப்பதோடு கால தாமதமும் ஏற்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.