உள்துறையின் பாராளுமன்ற குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்

286 0

201609201035182245_chidambaram-has-been-appointed-as-the-chairperson-of-the_secvpfஉள்துறை அமைச்சக நிலைக்குழுத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசின் அமைச்சக செயல்பாடுகளை கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும் பல்வேறு நிலைக் குழுக்கள் உள்ளன. அதில் 17 பாராளுமன்ற நிலைக்குழுக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சியும் பெற்றிருக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அந்த கட்சிகளுக்கு நிலைக் குழுக்களில் இடம் அளிக்கப்படும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீரப்ப மொய்லி நிதித்துறை நிலைக்குழுத் தலைவராகவும், சசிதரூர் வெளியுறவுத் துறை நிலைக் குழு தலைவராகவும் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பாராளுமன்ற நிலைக் குழுக்கள் சில மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி உள்துறை அமைச்சக நிலைக்குழுத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல்ராய் போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சக நிலைக் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது வரை உள்துறை நிலைக் குழு தலைவராக பட்டாச்சார்யா இருந்தார். தற்போது அந்த இடத்துக்கு ப.சிதம்பரம் அமர்த்தப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் வெறும் 44 எம்.பி.க்களையே வைத்துள்ள காங்கிரசுக்கு மிகவும் முக்கியமான நிலைக் குழு தலைவர் பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுத்திருப்பது அரசியல் நிபுணர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற பணிகள் முடங்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே ப.சிதம்பரத்தை நிலைக்குழு தலைவராக மத்திய அரசு நியமனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.