சென்னை-காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

321 0

201609201038590648_jayalalithaa-announces-chennai-kancheepuram-district-admk_secvpfசென்னை-காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கட்சியில் பல்வேறு நிர்வாகிகளுக்கு பதவி வழங்கி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-சென்னை மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.அஸ்லாம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

தென்சென்னை வடக்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் பொறுப்பில் உள்ள கவுன்சிலர் யு.கற்பகம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் பொறுப்பில் உள்ள நீலாங்கரை எம்.சி.முனுசாமி (ஏற்கனவே உள்ள மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பு உண்டு).

காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அம்மன் பி.வைரமுத்து (மாவட்ட துணை செயலாளர் பொறுப்பு இருக்கும்), காஞ்சி கிழக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் கே.பி.கந்தன் (பகுதிச் செயலாளர் பொறுப்பு இருக்கும்), மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் என்.பாஸ்கரன் (மாவட்ட பிரதிநிதி பொறுப்பு இருக்கும்) மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.ராஜேந்திர பாபு (106-வது வட்ட செயலாளர் பொறுப்பு இருக்கும்), ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தாம்பரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் எல்லார்செழியன், நகர பாசறை செயலாளர் கே.சுரேஷ்குமார், 7-வது வார்டு செயலாளர் கே.பாஸ்கர், 19-வது வார்டு செயலாளர் ஆர்.ஜி.ஏழுமலை, 21-வது வார்டு செயலாளர் உதய மணி, 24-வது வார்டு செயலாளர் தணிகாசலம், 35-வது வார்டு செயலாளர் பழக்கடை ஆறுமுகம், 36-வது வார்டு செயலாளர் பி.சேகர் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளராக மண்டலக்குழு தலைவர் காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி மாவட்டச் செயலாளராக கடப்பேரி எல்லார் செழியன், தாம்பரம் நகர அண்ணா தொழிற்சங்க நகரச் செயலாளராக இந்திரா நகர் முத்துக்குமார், தாம்பரம் நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நகரச் செயலாளராக சேலையூர் சந்தோஷ்குமார், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவராக மதுரப்பாக்கம் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலாளராக ராஜகீழ்ப்பாக்கம் மணவாளன், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலாளராக சிட்லபாக்கம் பேரூராட்சி தலைவர் இரா.மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளராக பள்ளிக்கரணை சிவப்பிரகாசம் (எ) பிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளராக அனகாபுத்தூர் விஜய சங்கர், பொருளாளராக அஸ்தினாபுரம் சி.ஆர்.எம்.மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் நகர 7-வது வார்டு செயலாளராக ரங்கநாதபுரம் தேவராஜ், 19-வது வார்டு செயலாளராக சேலையூர் ராஜேஸ்வரி நகர் வெங்கடேசன், 21-வது வார்டு செயலாளராக சாந்தா நகர் ராமநாதன், 24-வது வார்டு செயலாளராக கணபதிபுரம் கஜேந்திர முத்து, 35-வது வார்டு செயலாளராக மூகாம்பிகை நகர் பெரியசாமி, 36-வது வார்டு செயலாளராக மேற்கு தாம்பரம் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

காஞ்சி மேற்கு மாவட்ட அவைத்தலைவராக குன்னவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, குன்றத்தூர் ஒன்றிய செயலாளராக எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினராக ராஜமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பில் உள்ள கே.ஆர்.பாலசுப்பிரமணியம், மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பில் உள்ள எஸ்.முருகன், துணை செயலாளர் தர்மா தெய்வேந்திரன் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக தாமரை நகர் என்.கோவிந்தராஜும், மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக வி.டி.மணி, துணைச் செயலாளராக என்.ஜி.ஓ. காலனி எஸ்.ஐ. அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவின் அண்ணா தொழிற்சங்க தலைவராக சோழிங்கநல்லூர் தேவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக மகிழம்பாடி ஜெ.அறிவழகன் விஜய், புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.சின்னச்சாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தேனை சி வேலா,

ஆயிரம் விளக்கு பகுதி ஜெ.பேரவை பொருளாளர் பி.கே.அனில் குமார், 110-வது வடக்கு வட்ட கழக செயலாளர் நுங்கை விவேக், கிராமத்தெரு 2-வது லேன் பி.ஆறுமுகம் ஆகியோர் இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த போரூர் பேரூராட்சி 14-வது வார்டு ஏழுமலை, சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் சேட்டு என்ற அய்யாத்துரை, ஈரோடு புறநகர் மாவட்டம் மேற்குபாளையம் கந்தசாமி செம்பனார் கோவில் ஒன்றியம் திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கலியமூர்த்தி, தெற்கு ஒன்றிய விவசாய பிரிவு துணைச் செயலாளர் சுரேஷ், தில்லையாடி ஊராட்சி தலைவர் நடராஜன், வடக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் துரை ஜவகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பதவியில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.