யாழ்.மாவட்டத்தில் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளுக்கு 150 மில்லியன்

307 0

a-01-9யாழ்.மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் வடமாகாணத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் லக்ஸ்மன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுகள் மூலம் புதிய விடயங்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன், தெல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் கட்டுக்கரையில் மேற்கௌ்ளப்பட்ட அகழ்வாய்வு தொடர்பாக முடிவுகளை அறிவிக்கும்ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மத்திய கலாச்சார நிதியமானது யாழ்.மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.அந்த வகையில் அனுராதபுர காலத்தில் மிக முக்கியமான துறைமுகமாக காணப்பட்ட மாதோட்டதுறைமுகத்திற்கு மிக அண்மையில் காணப்படும் கட்டுக்கரை பகுதியும் முன்னர் ஒரு புராதனநகரமாக காணப்பட்டிருக்க வேண்டும்.

இதனை இப்போது செய்யப்பட்டுள்ள ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இங்கு பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.இதற்காக கலாச்சார மத்திய நிலையம் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஒரு மில்லின் ரூபாவினை ஒதுக்கி, இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அத்தோடு எதிர்வரும் ஆண்டு 150 மில்லியன் ரூபாவினை ஒதுக்கி யாழ்.மாவட்டத்தில் காணப்படும் தொல்லியல் மையங்களை பாதுகாப்பதற்கும், அவற்றினை மேலும் ஆய்வு செய்து புதிய விடயங்களை கண்டுபிடிப்பதற்குமான ஆய்வு நடவடிக்கைகளை யாழ்.பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளானது யாழ்ப்பாண பிரதேசத்தினதும், வட இலங்கையினதும் வரலாற்றிலே புதிய பல விடயங்களை கண்டுபிடித்து, புதிய ஒரு வரலாற்றினை எழுதுவதற்கு உறுதுணையாக காணப்படும் என நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.