புதிய புகையிரத பெட்டிகள் 160 கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நேற்று கையொப்பமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடன் நிவாரண திட்டத்தின் கீழ் 160 புகையிரத பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட உள்ளன.
இவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் அந்த புகையிரத பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளருக்கு இடையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இவற்றை கொள்வனவு செய்வதற்காக 82.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட உள்ளது.
இவை நவீன வசதிகளை கொண்டதாக அமைய உள்ளதுடன், எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் அவை பயணிகள் போக்குவரத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் போது போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதுயமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோர் உடனிருந்துள்ளனர்.