ஈரானின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானில் அடிக்கடி இதுபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 620-க்கும் மேற்பட்டோர் பலியானது நினைவுகூரத்தக்கது.