மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கர்ப்பிணிப்பெண்களை செல்லவேண்டாம்

282 0

zicaசிகா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அண்மையில் சிகா தொற்றுக்குள்ளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் கர்ப்பிணி பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதனால், அவர்களே மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இயக்குநர் டாக்டர் பாலித மஹிபால இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை இதுவரை சிகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. இருப்பினும், அத்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிகா தொற்றுக்குள்ளான நாடுகளிலிருந்து பயணிப்பவர்களுக்கு கட்டுநாயக்கா விமானநிலையத்திலேயே பரிசோதனையை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டில் டெங்கு நோய் பரிசோதனைக்கு வருபர்களை ஜிகா தொடர்பில் பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.