யாழில் ஹெரொயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 282 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளினை மீட்டுள்ளதாகவும்,கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.