வரட்சி காரணமாக கிளிநொச்சி, வட்டக்கச்சி மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த வரட்சியினால் பாதிக்கப்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடும்பங்களுக்கு கிராம மட்ட அமைப்புக்களின் மூலம் வரட்சி நிவாரணமாக 6.5 கிலோரோம் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் கிராம மட்ட அமைப்புக்களினூடாக வழங்கப்படும் நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக வட்டக்கச்சி பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தனிடம் வினவியபோது,
அரசாங்க அதிபரின் அனுதியுடன் அவசரகா தேவைக்காக மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அரிசிகளை வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.
இந் நிலையில் ஓரிரு இடங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட அரிசிகளில் வண்டுகள் இருப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசிகளில் வண்டுகள் காணப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக குறித்த அரிசிகளை மீள் வாழங்கி வேறு அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.