20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மனு

246 0

மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைய அரசிலமைப்பிற்கு முரணாணது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

20வது அரசியலமைப்பு திருத்தம் என்ற பெயரில் மக்கள் விடுதலை முன்னணி பாரளுமன்றத்திற்கு யோசனை ஒன்றை சமர்பித்துள்ளதாக மனுதாரரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல் உட்பட்ட பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதனால் அரசிலமைப்பின் 3 ஆவது மற்றும் 4 ஆவது பிரிவுகள் நேரடியாக மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த அறிக்ககையை பாராளுமன்றத்தில் சமமான வாக்குகளின் அடிப்படையில் நிறைவேற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு நேரடியாக மீறப்படுவதனால் அது பாராளுமன்றத்தில் மூன்றிற்கு இரண்டு என்ற அதிக வாக்குகளின் அடிப்படையில் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அனுமதிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அவர் உயர் நீதிமன்றத்திடம் வேண்டியுள்ளார்.

Leave a comment