தமக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து தாக்கப்பட்ட வைத்தியர் மற்றும் வைத்திய உத்தியோத்தர்கள் ஆகியோர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.
மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது நேற்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று முந்தினம் இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை இறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை வைத்தியரை தாக்கியதாலேயே மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுளளனர்.
தமக்கு பாதுகாப்பு வேண்டியும் இவ்வாறான சம்பவம் தொடர்ந்தும் நடை பெறாமல் இருப்பதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென்றே வைத்தியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த இப் பணிபகிஸ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.