அரசியலில் ஈடுபட மாட்டேன் – கமால்

330 0

625-117-560-350-160-300-053-800-210-160-90-1என்னிடம் அரசியல் கட்சி இல்லை எனவே நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அவிஸ்ஸாவளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வர வேண்டும் என்றால் புதிதாகத்தான் பிறக்க வேண்டும், எனவே தனக்கு இது அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் 800 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.

ஆனால் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டினையும் மூடி மறைத்தார் என்று கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை குணரத்ன இதன் போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

யுத்த இரகசியங்கள் என்னிடம் இருக்கின்றது என சிலர் நினைத்தால், அவர்கள் அதை தெரிந்து கொள்ள என்னுடன் கல்லறைக்குத் தான் வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், சில எழுத்தாளர்கள் அவர்களின் புத்தகங்கள் மூலம் யுத்த இரகசியங்களை தெரிவித்திருந்தனர் என்றும், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று அரசியலுக்கு திரும்பிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.