யுத்தத்தின் மூலம் பெற முடியாத சமஸ்டியை அரசியலமைப்பினூடாக பெற்றுக்கொடுக்க முனைகின்றனர் – விமல்

295 0

wimal_w_b-1யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஸ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னனியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களுக்கான பிராந்திய சமஸ்டி ஆட்சியை விரும்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் புலம்பெயர் அமைப்புடன் இணைந்து ஏற்கனவே புதிய அரசியலமைப்பில் அதற்கான வரைபுகளை உள்ளடக்கி விட்டார்கள்.

நாட்டை தாரைவார்க்க நினைப்பவர்கள் அதற்கான மூலதர்மங்களை பாராளுமன்றத்தின் அனுமதியோடு நிறைவேற்ற நினைக்கின்றனர்.

மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊகத்தின்படி நவம்பர் மாதம் புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமானால் ஜனவரி மாதமளவில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்கள்.

பாராளுமன்றத்தின் முழு அனுமதியுடன் அதனை நிறைவேற்றியதாகவும் கூறுவார்கள் ஆனால் நாட்டை நேசிப்பவர்கள் தன்னை சுதாகரித்துக்கொண்டு முழு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.