கூட்டு எதிர்க்கட்சியால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி தோல்வியடைந்துள்ளதென்று அந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்களே தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பிரச்சார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக் தெரிவித்துள்ளார்.
எந்தவொருவருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமான போதிலும், நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியால் நடத்தப்பட்டது ஒரு நகைச்சுவை நாடகமே என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன் நேற்றைய தினம் 20வது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், 06 மாத காலத்திற்குள் அரசாங்கம் இது சம்பந்தமான பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.