மன்னாரில் கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் துப்புரவு செய்த போது குறித்த காணியிலிருந்த கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாக காணப்பட்ட கிணற்றுக்குள் அதிகமான வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடிபொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றி அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது