நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிரணியினர் மேற்கொண்டுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான பேரணி கொழும்பு புறக்கோட்டை பகுதியிலிருந்து லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இதனால் குறித்த புறக்கோட்டையை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார்.