ஒன்றிணைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியின் போது, கொழும்பு நகரின் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, பொலிஸாரின் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் ஆறு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, ஜனாதிபதியின் உத்தியோபூர்வ வாசஸ்தலம், கறுவாத்தோட்டம், கோட்டை, நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களிலேயே தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.