கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியின் பிரதான கூட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த எதிர்ப்பு பேரணியில் பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 02.00 மணிக்கு மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிரக்கட்சியின் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது