காலின் கீழ் சுடுங்கள்-அமைச்சரவை அனுமதி

212 0

கொழும்பில் இன்று பொது எதிரணியினர் மேற்கொள்ளவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது  வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி காலின்கீழ் சுடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

அமைச்சரவையின் கூட்டத்தின் போது இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணி கட்டுக்கடங்காததாக மாறினால் பொதுமக்களின் சொத்திற்கும் உயிர்களிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் பொலிஸா இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி காலின் கீழ் சுடுவதற்கு தயங்ககூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் இந்த தீர்மானம் குறித்து பாதுகாப்பு பேரவைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக காலிற்கு கீழ் சுடுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment