கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில், பாதுகாப்பு படையினர் சிலர் சிவில் உடையில் ஆர்ப்பாட்ட பேரணிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள மஹிந்த,
“வன்முறைகளை தூண்டவே பாதுகாப்பு படையினர் இச் சதித் திட்டங்களில் ஈடுபட உள்ளனர். ஆனால் நாம் எந்த வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம்.
இலட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட உள்ளமையால் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே வன்முறைகளை தூண்டி ஆர்ப்பாட்டத்தை குழப்ப முயற்சி செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் வினவிய போது,
“இது முற்றிலும் பொய்யான விடயமாகும். ஆர்ப்பாட்டத்தை குழப்பி வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட பாதுகாப்பு படையினருக்கு எவ்வித தேவையும் இல்லை. பொதுமக்களையும், அரச சொத்துக்களையும் பாதுகாப்பதே எமது கடமையாகும் என்றார்.