நாட்டில் இன்று சுனாமி ஒத்திகை, மக்கள் வீண் பயம்கொள்ள வேண்டாம்- துமிந்த

247 0

சுனாமி அனர்த்தத்துக்கு முகம்கொடுப்பதற்கு பிராந்திய நாடுகளை தயார்படுத்தும் நோக்கில் உலகிலுள்ள 28 நாடுகளில் இன்று (05) நடைபெறும் சுனாமி ஒத்திகை நிகழ்வில் இலங்கையும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று (05) காலை 8.30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இலங்கையிலுள்ள 3 மாவட்டங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த ஒத்திகை நடைபெறவுள்ளது.

ஒத்திகை நடாத்தப்படுவது  தெரிவு செய்யப்பட்ட இடங்களிலானாலும் நாடு முழுவதிலுமுள்ள 77 சுனாமி எச்சரிக்கை மையங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படவுள்ளதாகவும், பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சுனாமி எச்சரிக்கை நடவடிக்கை கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தைக் குழப்பும் சதியல்ல எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

Leave a comment