ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலை நிறுத்தம் மேற்கொள்வதற்கு மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணி தீர்மானித்துள்ளது.
மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் பி.திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வேலை நிறுத்தத்தில் தாதி உதவியாளர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்