குடிமராமத்து பணிகள்: முதல்வர் ஆலோசனை!

214 0

ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம் உட்பட, பல்வேறு பணிகள் குறித்து, நான்கு மாவட்ட அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் நடந்து வரும், பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, முதல்வர் பழனி சாமி, மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார்.

நேற்று, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர் என, நான்கு மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம், குடிநீர் திட்டம் உட்பட, பல்வேறு திட்டப் பணிகளின் நிலை குறித்து, முதல்வர் கேட்டறிந்தார்.

பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a comment