பாண் விலை அதிகரித்தமை அசாதாரணமானது – ரஞ்சித் விதானகே

10795 0

ஒரு கிலோகிரோம் கோதுமை மாவின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரித்தமையை அடிப்படையாக கொண்டு ஒரு பாண் இறாத்தலின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு செய்தமை அசாதாரணமான விடயம் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இலங்கையர்கள் பலரின் பிரதான உணவுகளில் பாணும் முக்கிய உணவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் திடீரொன பாணின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

பாணொன்றை தயாரிப்பதற்கு ஒரு கிலோகிரேம் மா பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல் ஐந்து ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்ட ஒரு கொத்து ரொட்டி பார்சலுக்கும் ஒரு கிலோகிரோம் மா பயன்படுத்தப்படுவதில்லை.

எனவே இது குறித்து அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் உடனடியாக கவனம் செலுத்தி இந்த விலை அதிகரிப்பை இடைநிறுத்தி சாதாரண விலை உயர்வை வழங்க வேண்டும் என்றார்.

Leave a comment