ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அச்சமடையத் தேவையில்லை-ரஞ்சித்

265 0

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும் எனவும் தேவையற்ற விதத்தில் பொலிஸ் மா அதிபர் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி ஒருங்கிணைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்படும் மக்களை பாதுகாப்பான முறையில் மீண்டும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றையே தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் கொழும்பிற்கு வருவது அடித்துக்கொள்வதற்காகவல்ல எனவு தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி ஒருங்கிணைப்பாளர் ஐந்து இடங்களில் இருந்து அமைதியான ஆர்ப்பாட்டம் முன்னடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பொலிஸாரின் கடமை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி ஒருங்கிணைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment