அறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது- மங்கள

223 0

அறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது. இந்த இலக்கானது 2025 ஆம் ஆண்டளவில் அடையப்படும் என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து அதிகளவிலான கடன் மீளச் செலுத்தப்பட்ட வருடமாக இவ்வாண்டு பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்கட்டிய அவர்  இவ் வருடம் கடன்களை மீளச்செலுத்துவதற்காக 1.9 ட்ரில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அவற்றில் 82 சதவீதமானவை 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 4 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான கடன்கள் எதிர்வரும் இரு வருட காலத்திற்குள் மீள் செலுத்தி முடிக்கப்படும் என்றும் அவர் மேலம் குறிப்பிட்டார்.

Leave a comment